மாற்றுத்திறனாளிகளுக்காக தாம் குரல் கொடுப்பதாக சஜித் பிரேமதாஸ அறிவிப்பு.
மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனுக்காக தாம் எப்போதும் குரல் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 8.7 சதவீதம் மாற்றுத்திறனாளி சமூகம் உள்ளதாக சனத்தொகை கணக்;கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி சமூகத்திற்கான தேசிய மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சமூகம் தொடர்பில், பாராளுமன்றத்திலும் வெளியிலும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான நீதி மற்றும் நியாயம் குறித்து குரல் எழுப்ப தாம் தயங்கவில்லை என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றுத்திறனாளி சமூகத்துடன் தனியான சமூக உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டதாகவும், அந்த சமூகத்தின் சார்பாக கடமைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த போதிலும், துரதிஷ்டவசமாக தமக்கு அந்த ஆணை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
ஆனால், எதிர்க்கட்சியில் இருந்தபோது, மாற்றுத்திறனாளி சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஒவ்வொரு நொடியும் செயற்பட்டதாக சஜித் பிரேமதாஸ மேலும் குறிப்பிட்டார்.