சில வேட்பாளர்கள் தமது கருத்துக்களை வெளியிட முடிந்தாலும், அவர்களால் தீர்வுகளை வழங்க முடியாது.
மக்களின் வாழ்க்கைச் சுமை வெகுவாகக் குறைந்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, இதுவரையில் பெற்ற சாதனைகள் காரணமாக எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் சலுகைகள் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்றாகும்.
2022ஆம் ஆண்டில் பொருளாதார சவாலை எதிர்கொண்ட நிலையில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், தற்போது பங்களாதேஷ_க்கு ஏற்பட்டுள்ள நிலைமையே இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கும்.
சில ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடிகின்ற போதிலும், அவர்களால் நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. இவ்வாறானதொரு குழுவிடம் நாட்டை ஒப்படைத்தால் ஏற்படும் நிலைமையை ஜனாதிபதி இதன் போது தெளிவுப்படுத்தினார்.
இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது ஏனைய அரசியல் தலைவர்கள் மக்களுக்காக முன்வரவில்லை. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய சர்வதேச உறவுகளை கொண்ட அனுபவமிக்க தலைவரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.