NPP ஆட்சியில் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் என எச்சரிக்கை.
தேசிய மக்கள் சக்தியின் யோசனைகளை நடைமுறைப்படுத்தினால் 2022ஆம் ஆண்டு மே மாதத்தைவிட நெருக்கடியான சூழல் ஏற்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஒரு டொலரின் பெறுமதி 500 ரூபாவரை அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை அமுற்படுத்துவதன் மூலம் அனுர குமார திசாநாயக்க கோட்டாபய ராஜபக்ஷவைவிட பாரிய தோல்விகளை சந்திப்பார் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு ஒதுக்கத்தின் அளவு அதிகரித்துள்ளமையினால் வாகன இறக்குமதி மீதான தடைகளும் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன.
அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதியை 275 ரூபாவாக பேணுவது தமது இலக்காகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.