காஸாவின் வட பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு.
காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவை இஸ்ரேல் இராணுவம் பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து அங்கு இஸ்ரேல், தரைவழித் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அச்சம் நிலவுகிறது.
இஸ்ரேல் மேற்கொண்டிருக்கும் தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேலின் அத்துமீறல்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு இடையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 41 ஆயிரத்திற்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.