VAT வரியினை முழுமையாக நீக்கவிருப்பதாக அனுர குமார தெரிவிப்பு
உணவு, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வற் வரியினை முழுமையாக நீக்கவிருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை குறுகிய காலத்தில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார். அக்குரசவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அனுர குமார திசாநாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
அரசியலை பொதுமக்கள் சேவையாக மாற்றுவது தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பாகும். டொலரை நிலையாக பேணுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டு மக்களுக்கு இதுவரை கிடைத்த நிவாரண முறைமைக்குப் பதிலாக புதிய வேலைத்திட்டம் தமது ஆட்சியில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக குடும்பம் ஒன்றின் குறைந்த வருமானம் ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படும். இது பற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மொனறாகலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே திலித் ஜயவீர இதனைக் கூறினார்.