கி.ஆர். முறையில் எரிபொருள் மானியம் – சஜித் பிரேமதாச
பொதுமக்களின் தலைமைத்துவத்தில் உருவாகும் அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கு பலமான வாழ்வாதார முறை ஏற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிராமியப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர் விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஹெற்றிபொல நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
சகல வறிய குடுமபங்களுக்கும் இரண்டு வருடங்களுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள கம்-உதாவ வேலைத்திட்டத்தின் ஊடாக வீடற்ற சகல குடும்பங்களுக்கும் வீட்டுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விவசாயத் துறை, கடற்றொழில் துறை, முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளுக்கு கி.ஆர். குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் மானியம் வழங்கபப்படும். குருநாகல் மாவட்டத்தை பொருளாதார மத்திய நிலையமாக மாற்றுவது பிரதான எதிர்பார்ப்பென்றும் அவர் தெரிவித்தார்.