இளைஞர் – யுவதிகளுக்கு அடுத்த வருடம் தொழில் வாய்ப்பு.
நெருக்கடிக்கு மத்தியில் நாடு ஈட்டிய வெற்றியினைப் பாதுகாத்து முன்னோக்கி செல்வதாயின் எதிர்வரும் 21ஆம் திகதி மக்கள் சரியான தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருக்கும் வேலைத்திட்டத்திற்கே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக் கிடைத்துள்ளது.
மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளர்களால் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் இல்லையென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். வெல்லவாயவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.
ஹம்பாந்தோட்டையில் கைத்தொழில் துறை அபிவிருத்தியடையும்போது அதன் முதலீட்டு வலயமாக வெல்லவாய அமைக்கப்படும். அத்துடன் மொனறாகலையை மையமாகக் கொண்டு அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறான வேலைத்திட்டங்களை அமுற்படுத்துவதற்கு தான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்-யுவதிகளுக்க நான்கு வருடங்களாக தொழில் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அடுத்த வருடத்தில் அரச மற்றும் தனியார் துறைகளில் இளைஞர் யுவதிகளுக்காக ஒரு லட்சம் தொழில்வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.