தேசிய மக்கள் சக்தி தலைமையில் தலைமைத்துவ சபை.
தமது தலைமையிலான ஆட்சியின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பல்துறைசார் சமூகக் குழுக்களை ஒழுங்கு செய்யப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தலைமைத்துவ சபை இனங்காணப்பட்டுள்ளது. அரச நிறுவனங்கள் சார்ந்த பொறுப்புக்களை ஒப்படைக்கக்கூடிய ஆற்றல்களைக் கொண்ட குழு தமது கட்சியிடம் உள்ளது என திரு.திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
எதிர்;க்கட்சி முன்னெடுக்கும் போலிப் பிரசாரங்களில் ஏமாற வேண்டாமென அவர் கோரிக்கை விடுத்தார்.