இலங்கையை முக்கிய கொடுக்கல்-வாங்கல் மையமாக மாற்றுவதற்கு திட்டம்
கொழும்பு துறைமுகம் உலக வர்த்தக மையமாக மாற்றப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது முதலீட்டாளர்களுக்கு உயர் வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற தனது இறுதி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான திட்டம் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்த அவர், உலகின் பலம் வாய்ந்த வர்த்தகர்களை நாட்டிற்கு ஈர்ப்பதே இதன் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.
விவசாயத்திற்கு தொழில்நுட்பம் புகுத்தப்படும். பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத்;தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
ஒவ்வொரு அங்குல விவசாய நிலத்திலும் விவசாயம் செய்ய வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு. நடைபாதையில் வர்த்தகம் செய்யும் மக்களுக்கும் சிறந்த தொழில்களை வழங்கி அவர்களுக்கு சிறந்த வருமானத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.