சிறந்த ஊடக கலாசாரத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை.
நாட்டில் சிறந்த ஊடக கலாசாரத்தை உருவாக்க தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்தத்தை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. ஏனைய மதங்களைப் பின்பற்றும் உரிமையும் நிலைநாட்டப்படுகிறது.
தேசிய ஐக்கியத்தை உருவாக்கி, நாட்டில் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அதற்கு வெகுஜன ஊடகங்களின் வகிபாகம் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டார்.
வெகுஜன ஊடக அமைச்சில் இன்று காலை சர்வமத நிகழ்வுகளின் பின்னர் அவர் தனது கடமைகளை ஆரம்பித்தார். வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவும் நிகழ்வில் கலந்துகொண்டார்.