உக்ரேன் வெற்றிபெறும் வரை தமது ஒத்துழைப்புக் கிடைக்கும் – அமெரிக்கா
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரேன் வெற்றிபெறும் வரை தமது ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதேவேளை, காசாவில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின்போதே ஜோ பைடன் இந்த விடயத்தைத் தெரிவித்தார். ரஷ்யா நடத்திவரும் போர் தோல்வியை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.