பொதுத் தேர்தலுக்கு தபால் திணைக்களம் தயார்.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தபால் திணைக்களம் தயாராக உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
எமது நிலையத்திற்கு கருத்து தெரிவித்த அவர், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதால் பொதுத் தேர்தலுக்கும் தயாராக இருப்பதாக குறிபிட்டார். எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
தபால் திணைக்களம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.
இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை விநியோகிப்பதற்கு தாங்கள் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.