நிலையான அபிவிருத்திக்கான பங்கை வகிக்க சீனா தயார்.
நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல், இறையாண்மைக்கு மதிப்பளித்து, இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு வினைத்திறனான பங்கை ஆற்ற சீனா தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியேன் தெரிவித்துள்ளார்.
சீனா தொடர்ந்தும் இலங்கையின் நட்பு நாடாக இருந்து வருகிறது. புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர் எதிர்காலத்தில் இரு நாடுகளினதும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்துடன் இணைந்து தொடர்ந்தும் செயற்படத் தயார் எனவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியேன் மேலும் தெரிவித்துள்ளார்.