இஸ்ரேலின் வான்பாதுகாப்பபை ஈரான் முறியடித்திருப்பதாக தகவல்
இஸ்ரேல் நிறுவியிருந்த வான்பாதுகாப்பு கட்டமைப்பை ஈரானின் பலஸ்டிக் ஏவுகணைகள் வெற்றிகரமாக முறியடித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் இதற்கு முன்னர் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்ட போதும்; அதனை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு கட்டமைப்பு தடுத்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஈரானுடனான பதற்றம் அதிகரித்தமைக்கான முழுப் பொறுப்பினையும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் ரஷ்யாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ஈரானை ஆத்திரமூட்டும் வகையிலான செயற்பாடுகளை இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து, ஈரான் தாக்குல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் ஸ்திரமற்ற நிலைக்கான முழுப்பொறுப்பையும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ரஷ்யாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளும் பட்சத்தில் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இஸ்ரேலின் பாதுகாப்புக்காக 30 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளன.