உலக வங்கியின் மூலம் இலங்கைக்கு 20 கோடி டொலர் நிதியுதவி.
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு உதவும் வகையில் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி சங்கம் 20 கோடி டொலர் நிதியுதவியை அங்கீகரித்துள்ளது.
இதற்குரிய கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்ச்சி ஜனாதிபதி அநுரகுமுhர திசாநாயக்க முன்னிலையில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன, உலக வங்கியின் சார்பில் அதன் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் ஆகியோர் கைச்சாத்திட்டார்கள்.
இந்த நிதி வசதியை வழங்குவதானது இலங்கையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்புக்குரிய வெளிப்பாடாகும்.
இலங்கையின் பொருளாதாரம், மறுசீரமைப்பு, ஸ்திரத்தன்மை சார்ந்த அபிவிருத்தி கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு அமைய உலக வங்கியின் நிதியுதவி கிடைக்கிறது.
பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்தல், போட்டித்தன்மையை அதிகரித்தல், வறிய மற்றும் பாதிப்பை எதிர்கொள்கின்ற குழுக்களை பாதுகாத்தல் ஆகிய மூன்று துறைகளின் கீழ் வேலைத்திட்டம் அமுலாகிறது.