ஜனாதிபதி ஊடக விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2024 – ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடகவியலாளர்களின் பணிகளை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும்.
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம், பாடசாலை ஊடகம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
54 விருதுகளுடன் நான்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை வெளியான படைப்புக்களை இதற்காக சமர்ப்பிக்க முடியும்.
இன்று தொடக்கம் இம்மாதம் 31ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்க முடியும். ஊடக அமைச்சின் இணையத் தளத்திற்குச் சென்று இதுதொடர்பான விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.