இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அமெரிக்கா ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை நினைவுகூர்ந்து ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான காலப்பகுதியையும் அமைதியான முறையில் முன்னெடுத்தமை பற்றி அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவிற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஸ்திரத்தன்மை, சுபீட்சம், முன்னெற்றம் எனபனவற்றை அடைந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் அமெரிக்க ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை. இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கத் தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சாங்க் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாரநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்து அவர் கலந்துரையாடினார்.