உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திக்கான் தூதுவர் பாராட்டு
இலங்கையின் வத்திக்கானுக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிறையன் உடைய்க்வே ஆண்டகைக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதிக்கு தூதுவர் இதன்போது வாழ்த்துத் தெரிவித்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் இறைமை மிக்க வத்திக்கான் அரசின் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸின் வாழ்த்துக்களையும் தூதுவர் ஜனாதிபதிக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் தலைமையின் கீழ் இலங்கை சுபீட்சத்தை நோக்கிப் பயணிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையின் எதிர்காலம் குறித்து சாதகமான கருத்துக்களையும் தூதுவர் வெளிப்படுத்தினார். ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பையும் அவர் வரவேற்றார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்;பட்ட தாக்குதல் தொடர்பில் தூதுவர் தனது கவலையினை தெரிவித்தார். அத்துடன் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகளை அவர் வரவேற்றார்.