நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று முதல் மழையுடன் கூடிய காலநிலை
நாட்டின் வளிமண்டலத்தில் நிலவும் தளம்பலினால், தென்மேற்குப் பிரதேசத்தில் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர்களுக்கும் அதிகமான மழை பெய்யலாம்.
மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மாலை வேளையில் அல்லது இரவு நேரத்தில் 75 மில்லிமீற்றர்களுக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
வட மாகாணத்தில் நாளை காலை வேளையில் மழை பெய்யலாம் என்றும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, மன்னாரிலிருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரைக்கு அப்பால் உள்ள கடற்பிரசேத்தில் காற்றின் வேகம் மணிக்கும் 30 தொடக்கம் 40 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கலாம்.
இந்தக் கடல் பிரதேசம் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.