Home » பங்களாதேஸ் அணியுடனான ரி-20 தொடர் இந்தியா வசம்

பங்களாதேஸ் அணியுடனான ரி-20 தொடர் இந்தியா வசம்

Source

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களை பெற்றது. 222 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.

இதன்மூலம் மூன்று போட்டிகளை கொண்ட தொடரின் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இதேவேளை மகளிருக்கான ரி-ருவென்டி உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் 12ஆவது போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றது. 173 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 90 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image