Home » ஜனாதிபதியின் புகைப்படத்தை அனுமதியின்றி பிரசுரிப்பதற்குத் தடை

ஜனாதிபதியின் புகைப்படத்தை அனுமதியின்றி பிரசுரிப்பதற்குத் தடை

Source

பல்வேறு நிகழ்வுகளின்போது ஜனாதிபதியின் புகைப்படம் மற்றும் செய்தியினை பிரசுரிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து எழுத்து மூலமான அனுமதியைப் பெறவேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாரநாயக்க சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார்.

அரச நிதியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின்போது அரச கொள்கைக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி செயலாளர் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சகல அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள், அரச கூட்டுத்தாபனங்கள் உட்பட நியதிச்சபைகளின் பிரதானிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image