சைபர் குற்றச்சாட்டு: மியன்மாரின் தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை!
மியன்மாரின் சைபர் குற்றவியல் மத்திய நிலையங்களில் தங்கியிருக்கும் இலங்கையர்களை விடுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தாய்லாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைடுன் மஹாபனன் ஜோனுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போதே பிரதமர் இந்த கோரிக்கையினை விடுத்தார். மியன்மாரின் சைபர் குற்றவியல் நிலையங்களில் தங்கியிருந்த 28 இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
குறித்த மத்திய நிலையத்தில் தங்கியிருக்கும் மேலும் 40 இலங்கையர்களை மீட்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதமர் இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.