Home » ரணிலின் விசேட உரை – என்ன கூறுகிறார்?

ரணிலின் விசேட உரை – என்ன கூறுகிறார்?

Source

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு தன்னுடன் இருந்த அனுபவமிக்கவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மால் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027 ஆம் ஆண்டுக்குள் அரச வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும், பொறுப்புகளில் இருந்து தட்டிக்கழிக்காத அனுபவம் வாய்ந்த அணிதான் அடுத்த நாடாளுமன்றத்திற்கு தேவை என்றும் வலியுறுத்தினார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டை மீட்டெடுக்க தன்னுடன் இணைந்து செயற்பட்ட குழுவினர் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். அந்த குழு வெற்றி பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி தனது உரையில் மேலும் கூறியுள்ளதாவது,

கடனை அடைக்க முடியாமல் நாடு வாங்குரோத்து அடைந்து விட்டதாக அறிவித்தபோது நான் ஜனாதிபதியாக நாட்டைப் பொறுப்பேற்றேன்.

அப்போது எனது முதன்மை நோக்கம் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதும் வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை விடுபடுவதும்தான்.

அதற்காக எமக்கு கடன் வழங்கிய பதினெட்டு நாடுகளும், தனியார் பத்திரப்பதிவுதாரர்களும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இரண்டு வருடங்களில் உடன்படிக்கைக்கு வந்தேன்.

அதன்படி, நமது கடனை நீடித்து நிலைக்கக் கூடியதாக மாற்றுவது குறித்தும், பின்னர் நமது நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து அகற்றுவது குறித்தும் ஒரு உடன்பாட்டை எட்டினோம்.

இந்த நடைமுறைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு, இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் தனியார் பத்திரதாரர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

நாம் ஏற்படுத்திய அமைப்பு காரணமாக, இப்போது வெளிநாட்டு வங்கிகளுடன் வர்த்தகம் செய்ய முடியும். வெளிநாட்டு உதவியும் கிடைக்கும். எங்கள் கடன் நிலைத்தன்மையின் காரணமாக வங்குரோத்து நிலை இப்போது முடிந்துவிட்டது.

நாடு வங்குரோத்து அடைந்ததால் பிணை எடுப்புப் பங்கிற்கு கடந்த நாடாளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றினேன். அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நாடாளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றிய எனது அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது நாம் அந்த நிலைத்தன்மை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி திருத்தங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால், திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நாட்டின் நிதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவது புதிய நாடாளுமன்றத்தின் பொறுப்பு.

நிலைத்தன்மையை செயல்படுத்துவதற்கும் அதை அடைவதற்கும் எங்களிடம் பல இலக்குகள் உள்ளன. முதலில் 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை அடைக்க வேண்டும்.

2027-க்குள் நமது அரசின் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக இருக்க வேண்டும். இப்போது அந்த எண்ணிக்கை 12 சதவீதமாக உள்ளது. அந்த இலக்கை அடைய, ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும்.

அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள், 2019 இன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மீண்டும் பெற முடியும். அதே சமயம் அந்தியயச் செலாவணி கையிருப்பையும் அதிகரிக்க வேண்டும். அந்த அந்நியச் செலாவணி கையிருப்பு 10-14 பில்லியன் அமெரிக்க டொலர் வரம்பில் இருக்க வேண்டும்.

இந்த இலக்குகளை அடைந்த பிறகு, கடனை அடைக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் நாம் மேற்கூறிய இலக்குகளை அடைய வேண்டும். அதற்கு விரைவான வளர்ச்சியை உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் பலவற்றை செயல்படுத்துவதாகும்.

இந்த அனைத்து விடயங்களுக்கும் நாடாளுமன்றமே பொறுப்பு. இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின்படி, எந்த கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது.

எப்படியாவது புதிய நாடாளுமன்றத்தின் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமானால் கடந்த நாடாளுமன்றத்தில் பெற்ற அனுபவத்தை நிறுத்த வேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக என்னுடன் பணியாற்றியவர்கள் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த அனுபவம் உள்ளவர்கள் எனவே அவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தில் இருந்தாலும் சரி, இந்த அனுபவம் இல்லாமல் நாடாளுமன்றத்தை நடத்த முடியாது. பின்னர் அவர்கள் இலக்குகளை அடைவதில் தோல்வியடைகிறார்கள்.

எனவே, பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எமக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியில் செயற்பட்டவர்கள், புதிய கூட்டணியின் ஏனைய கட்சிகள் என அனைவரும் எமது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றனர்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு இந்த அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்தை புதிய நாடாளுமன்றம் தீர்மானிக்கும்.

இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்தால் நாடாக மீண்டு வரலாம். தவறினால் நாடு மீண்டும் அழியும். மீண்டும் வரிசையில் நிற்கும் காலத்திற்கு செல்லும்.

எனவே, எரிவாயு சிலிண்டருக்காக அனைவரும் தங்களது பெறுமதியான வாக்குகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் – என்றார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image