உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தேர்தல் ஆணையாளர் விசேட அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று(19.1.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படும் என சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும், தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தினால் அநீதி ஏற்படும் என கருதும் எந்தவொரு தரப்பினரும் நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக 22.08.2024 அன்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தேர்தல் ஆணைக்குழு உரிய மரியாதையுடன் கவனத்தில் எடுத்துக் கொண்டது என 3 ஒக்டோபர் 2024 அன்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழு தனது பங்களிப்பை முழுமையாக புரிந்து கொண்டு இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்படவுள்ளதாகவும் அற்றையதினம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலுக்கு இடையே முன்னதாக தீர்மானிக்கப்பட்ட எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.