தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பொதுக்கூட்டம் தங்காலையில்..
தேசிய மக்கள் சக்தியின், நாட்டுக்காக திசைக்காட்டியுடன் ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் மாவட்ட ரீதியில் நடத்தப்படும் தொடர் பொதுக்கூட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது பொதுக்கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு தங்காலை நகரில் நடைபெறவுள்ளது.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் முதலாவது பொதுக்கூட்டம் இதுவாகும்.
இரண்டாவது பொதுக்கூட்டம் கட்டுநாயக்க தவிந்திர மெண்டிஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. மூன்றாவது பொதுக்கூட்டம் ஹோமாகம நகரில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்காக மக்களை தெளிவூட்டும் பிரதேச ரீதியிலான வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பிரதேச ரீதியில் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி தலைமையில் மாவட்ட ரீதியில் கூட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்காக மாவட்ட ரீதியில் நடத்தப்படும் கூட்டங்களை குறைத்து, பிரதேச ரீதியில் மக்களுக்கு தெளிவூட்டுமாறு தேசிய மக்கள் சக்தி தமது பிரதேச அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.