எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும். அது தொடர்பில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் அரசாங்க அதிபருமான டபிள்யூ.ஏ.தர்மசிறி தெரிவித்தார்.
தேர்தல் கடமைகளுக்காக தேவையான அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அடுத்து வரும் சில தினங்களுக்குள் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கான நேர அட்டவனை மற்றும் கடமை குறித்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும்.
எல்பிட்டிய தேர்தலுக்கு வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 67ஆகும். எல்பிட்டிய பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இந்தத் தேர்தலில் எட்டு அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன. இதற்கு முன்னர் இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மையை பெற்றிருந்தது.
இருப்பினும், 2024ஆம் ஆண்டுக்கான எல்ப்பிட்டிய பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பொழுது அது சில தடவைகள் தோல்வி கண்டதை அடுத்தே, அந்த பிரதேச சபையில் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.