நல்லாட்சியின் போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவியது.
2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சியின் போது தேசிய பாதுகாப்புத் தொடர்பில் இருண்ட யுகம் நிலவியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ரவிந்திர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரும் ஒன்றிணைந்து தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மக்களின் வாழ்க்கைச் சுமையினை குறைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்றும் அவர் கூறினார்.