இலங்கை – நேபாள மகளிர் அணிகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டி இன்று
சாஃப் மகளிர் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் மற்றுமொரு போட்டி இன்று நேபாளத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் நேபாள மகளிர் அணிகள் இதில் மோதவுள்ளன.
சுற்றுலா நியூசிலாந்து கிரிக்கட் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.
பூனே மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.
இதேவேளை, சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பாகியுள்ளது.
ராவல்பிண்டி மைதானத்தில் போட்டி இடம்பெறுகிறது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
சுற்றுலா நியூசிலாந்து மகளிர் கிரிக்கட் அணிக்கும், இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அஹ்மதாபாத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30ற்கு போட்டி ஆரம்பமாகும்.