Home » இலங்கையின் சுற்றுலாத் தளங்களை அச்சமின்றி கண்டுகளிக்க முடியும்.

இலங்கையின் சுற்றுலாத் தளங்களை அச்சமின்றி கண்டுகளிக்க முடியும்.

Source

எதிர்வரும் சுற்றுலா பருவகாலத்தில் இலங்கைக்கு வருகைதருமாறு உலகளாவிய ரீதியில் உள்ள சுற்றுலாப் பயணிகளிடம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் ஏற்படும் எதிர்வரும் சில மாதங்கள், அவர்களின் பிரதான சுற்றுலாத் தளமாக இலங்கை அமையும்.

இங்கு வருகைதரும் சகல சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பான முறையில் இலங்கையை பார்வையிடலாம்.

இலங்கையில் உள்ள சகல சுற்றுலாத் தளங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக்க ஹேவாவசம் தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image