இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் அணுமின் நிலையங்கள் பாதிக்கப்படவில்லை.
இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் அணுமின் நிலையங்கள் பாதிக்கப்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள தனது முகவரகத்தின் பரிசோதகர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ரஃபேல் கிராஸ்ஸி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஈரானில் அடையாளம் காணப்பட்ட பல இலக்குகள் மீது இஸ்ரேல் நேற்று சக்திவாய்ந்த வான் தாக்குதல்களை நடத்தியது. ஒரு மாதத்திற்கு முன்னர்,
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த வான்; தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
இதேவேளை, லெபனானில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
லெபனானின் நெருக்கடியான பகுதிகளில் உள்ள மக்களுக்கு எட்டு மனிதாபிமான உதவித் தொகை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.
தெற்கு லெபனானில் மாத்திரம் மூன்று லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, உலக சுகாதார அமைப்பும் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு போலியோ, தட்டம்மை, சளி மற்றும் ரூபெல்லா தடுப்பூசி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியமும் லெபனானில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது.