புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மீளாய்வு செய்ய நடவடிக்கை.
கடந்த காலங்களில் பல்வேறு ஒப்பந்தங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மீளாய்வு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மன்னார் காற்றாலை மின் திட்டம் உட்பட சுமார் 40 காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
ஐந்து முதல் 100 மெகாவோட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டுக்கு பாதகமான உடன்படிக்கைகள் பல இந்த ஒப்பந்தங்களின் கீழ் எட்டப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.
குழுவின் அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அனைத்து திட்டங்களும் மிகவும் பயனுள்ளதாக செயல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.