நாட்டின் நெல் கையிருப்பு பற்றிய அறிக்கை ஜனாதிபதியிடம்.
நாட்டில் கையிருப்பில் உள்ள நெல் கையிருப்புப் பற்றிய அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் இந்த வாரம் கையளிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.
அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது.
சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களிடமும், பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களிடமும் காணப்படும் நெல் கையிருப்பு பற்றி இதன்போது மதிப்பீடு செய்யப்படவிருக்கிறது.
உத்தரவாத விலையை விட, கூடுதலான விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் இடங்களை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டரிசிக்கென 220 ரூபா உத்தரவாத விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விட கூடுதலான விலைக்கு அரிசியை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை வலியுறுத்தியிருக்கிறது.