இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமிய பவானில் விசேட பூஜை வழிப்பாடுகளும் இடம்பெற்றது.



The post சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று appeared first on LNW Tamil.