சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்களே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.
கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்ற பெண்களும் அலையில் சிக்கி பலியானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவி ஷாலினி, தேவகி செல்வம், பவானி, காயத்திரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த கல்லூரி மாணவி 17 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு appeared first on LNW Tamil.