இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தெற்காசிய நாடுகளில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் அதை மேம்டுத்துவது தொடர்பாகவும், இதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மாநாட்டில் ஆராயப்பட்டது.
இம்மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன், மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணன், இந்தோனேஷியாவின் துணை சபாநாயகர் மற்றும் இந்தோனேஷிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சிங்கப்பூர் நாட்டின் அரச பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஜார்கண்ட் மாநிலத்தின் நிதி திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ராதா கிருஷ்ணன் கிஷோர், பாராளுமன்ற உறுப்பினர் மஹுவா மாஜி ஆகியோர் கௌரவித்தனர்.


The post இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு appeared first on LNW Tamil.