சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிறப்பு தூதுக் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
IMF தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலி கொசாக் தெரிவிக்கையில், இந்தக் குழு ஜனவரி 22 முதல் 28 வரை இலங்கையில் தங்கியிருக்கும் என கூறினார்.
இந்தக் காலப்பகுதியில் ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை அவர்கள் மதிப்பீடு செய்யவுள்ளதாகவும், அதனால் இலங்கையின் விரிவான நிதி வசதி திட்டமான (EFF) மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பாக கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
The post இலங்கை வரும் IMF சிறப்பு தூதுக் குழு appeared first on LNW Tamil.