இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய விலைகளின் விபரங்கள் பின்வருமாறு:
- லங்கா ஓட்டோ டீசல்: 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 392.00 ரூபாவாகும்.
- லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4: 15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 458.00 ரூபாவாகும்.
- லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4: 15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 470.00 ரூபாவாகும்.
- லங்கா பெற்றோல் 92 ஒக்டேன்: 12.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 410.00 ரூபாவாகும்.
- மண்ணெண்ணெய்: 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 265.00 ரூபாவாகும்.
The post எரிபொருள் விலை மீண்டும் உயர்வு appeared first on LNW Tamil.