Home » அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

Source

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி மாற்று விகித அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 322.2875 ஆகவும், விற்பனை விலை ரூ. 329.9201 ஆகவும் பதிவாகியுள்ளது.

இது 2023 டிசம்பர் 27 ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் பதிவான அமெரிக்க டொலரின் அதிகபட்ச விற்பனை விலையாகும்.

2022 மார்ச் 07 ஆம் திகதி வரை ரூ. 202.99 என்ற நிலையான மதிப்பில் காணப்பட்ட அமெரிக்க டொலரின் பெறுமதி, 2022 மார்ச் 08 ஆம் திகதி ரூபாயை மிதவை மாற்று விகித முறைக்கு மாற்றியதன் பின்னர் வேகமாக உயரத் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக, 2022 மே 12 ஆம் திகதியளவில் டொலரின் விற்பனை விலை ரூ. 377.49 வரை அதிகரித்திருந்தது.

பின்னர் நிலைமை படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அது ரூ. 328.77 ஆக குறைந்தது.

அதன் பின்னர் இதுவரை பதிவான அமெரிக்க டொலரின் குறைந்தபட்ச விற்பனை விலை 2024 டிசம்பர் 13 ஆம் திகதி பதிவாகியது. அன்றைய தினம் அது ரூ. 294.49 ஆக இருந்தது.

மேலும், இந்த வாரத்தில் அமெரிக்க டொலரின் விலை அதிகரித்த விதம் தொடர்பான விவரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image