Home » இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைகிறது

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைகிறது

Source

ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு நாணய கையிருப்பு 6,450 மில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் நடப்புக் கணக்கில் (Current Account) பற்றாக்குறை பதிவாகியிருந்த நிலையில், ஊக அடிப்படையிலான வெளிநாட்டு நாணயத் தேவையை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி நிகர அடிப்படையில் தனது வெளிநாட்டு நாணய கையிருப்பை சந்தையில் விற்பனை செய்திருந்தது.

எனினும், ஜூன் மாதத்தில் மத்திய வங்கி சந்தையிலிருந்து 70.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிகர அடிப்படையில் கொள்வனவு செய்துள்ளது.

இருப்பினும், கடந்த மாதத்தில் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைந்ததற்கான முக்கிய காரணமாக, அதற்கு முந்தைய மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கிடைத்த கடன் தொகையின் குறிப்பிடத்தக்க பகுதியை அரசாங்கம் செலவிட்டதே எனக் கருதப்படுகிறது.

The post இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைகிறது appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both