Home » OCI வீசா கட்டண குறைப்பு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கவனத்துக்கு மீண்டும் கொண்டு சென்ற செந்தில் தொண்டமான்!

OCI வீசா கட்டண குறைப்பு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கவனத்துக்கு மீண்டும் கொண்டு சென்ற செந்தில் தொண்டமான்!

Source

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் OCI வீசாவை வழங்குங்கவதற்கான நடைமுறையை இலகுப்படுத்திய போதிலும், OCI வீசா பெறுவதற்கான கட்டணம் இலங்கை ரூபா மதிப்பில் 90 ஆயிரம் என்பதால், அதனை பெற்றுக் கொள்வதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே OCI வீசாவை பெறுவதற்கு விசேட சலுகை முறையில் குறைந்த கட்டணம் அறவிட வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

தெலுங்கானா முதலமைச்சரை சந்தித்தது குறித்தும், அவருடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் குறித்தும் செந்தில் தொண்டமான் சந்தோஷ் ஜாவிடம் தெளிவுப்படுத்தினார்.

மேலும் இச்சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

The post OCI வீசா கட்டண குறைப்பு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கவனத்துக்கு மீண்டும் கொண்டு சென்ற செந்தில் தொண்டமான்! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both