நடப்பு ஆண்டில் இதுவரை இலங்கையில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,306 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை நாடு முழுவதும் 65 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளிகளின் இறப்பு வீதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
ஆண்டின் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 29,973 ஆகும்.
ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 4,959 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த நோயாளர்களில் 52.96 சதவீதம், அதாவது 47,824 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
தென் மாகாணத்தில் 13,361 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,027 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், மாவட்ட ரீதியில் அதிகளவிலான பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கே ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 19,204 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 17,955 நோயாளர்களும், கண்டியில் 6,413 நோயாளர்களும், மாத்தறையில் 5,971 நோயாளர்களும், களுத்துறையில் 5,871 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
The post ஒரு லட்சத்தை நெருங்கும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை appeared first on LNW Tamil.