எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் பேரணிக்காக, நகரில் உள்ள இரண்டு மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களையும் வழங்க அனுராதபுர நகர சபை மறுப்பு தெரிவித்துள்ளது.
குறித்த நாட்களில் வேறு தரப்பினரால் வலிசிங்க ஹரிச்சந்திர விளையாட்டரங்கமும், சல்காது (நகர சபை) விளையாட்டு மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவற்றை அன்றைய தினம் வழங்க முடியாது என அனுராதபுர மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன், பேரணிக்காக பொருத்தமான வேறு ஒரு நாளை ஒதுக்கிக்கொள்ள முடியும் என்பதால், அதற்கான மாற்றுத் திகதியை பரிசீலிக்குமாறும் நகர சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சல்காது மைதானத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தாங்கள் முன்கூட்டியே விண்ணப்பித்திருந்த போதிலும், பின்னர் விண்ணப்பித்த வேறு தரப்பினருக்கு அந்த மைதானத்தை வழங்க நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோன்று, வலிசிங்க ஹரிச்சந்திர விளையாட்டரங்கமும் மூன்றாம் தரப்பினரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி தங்களுக்கு வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நகர சபை மேயரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுஜன பெரமுன பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
The post அனுராதபுரத்தில் மொட்டு கட்சிக்கு மைதானங்களை வழங்க நகர சபை மறுப்பு appeared first on LNW Tamil.