இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08ஆம் திகதி இலங்கை வருகை
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும், இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான மற்றுமொரு ஒப்பந்தமும் என இரண்டு ஒப்பந்தங்கள் இந்த விஜயத்தின்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ராஜ்நாத் சிங்கின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08ஆம் திகதி இலங்கை வருகை appeared first on LNW Tamil.