Home » அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை

அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை

Source

கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரை கைது செய்வதற்கான பிடியாணையை இன்று (16) பிறப்பித்துள்ளார்.

கபில சந்திரசேனவின் மனைவிக்காக பிணையாளர்களாக முன்னிலையாகியிருந்த அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி, நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிரான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரவிந்த டி சில்வாவின் தாயார் உயிரிழந்துள்ளதுடன், அவரது இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவிருந்ததால், அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என அவர்களுக்காக முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

எனினும், பிடியாணையை மீளப் பெறுவது தொடர்பாக பரிசீலிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என நீதவான் பசன் அமரசேன தெரிவித்துள்ளார்.

The post அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both