Home » தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

Source

தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி நுகர்வோரை அசெளகரியத்துக்கு உள்ளாக்கினால், அதற்கு எதிராக சட்டப்பூர்வமாக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்ட அவர், உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள போதிலும், அதற்கு இணையான சதவீதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை உயர்வில் பெரும் பகுதியை அரசாங்கமே மானியமாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

“எரிபொருள் விலை 10 ரூபாவால் உயரும் போது, அரசாங்கமாக நாம் 70 ரூபாவை மானியமாக வழங்குகிறோம் என்பதை யாரும் பேசுவதில்லை. உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு இணையான தொகையை நாம் இங்கு உயர்த்தவில்லை. முன்னதாக மானியங்களுக்காக 57 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. இனிவரும் மூன்று மாதங்களுக்கும் மேலும் 41 பில்லியன் ரூபாவை மானியமாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த விலை உயர்வின் ஒரு பகுதியைத் தாங்கிக்கொள்ளுமாறு தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சில தனியார் எரிபொருள் நிலையங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி நுகர்வோரை அசெளகரியத்திற்கு உள்ளாக்க முயற்சிக்கின்றன. அவர்கள் கோரும் அளவுக்கு விலையை உயர்த்தி நுகர்வோரைப் பாதிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

ஒப்பந்தங்களின்படி விலை சூத்திரம் (Price Formula) அல்லது செலவு அடிப்படையிலான விலையேற்றத்திற்குச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புள்ளது. ஆனால், அவர்கள் தொடர்ந்து விநியோகத்தைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தினால் சட்டப்படி எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். முதலீட்டாளர்களைப் பாதிப்பது எங்கள் நோக்கமல்ல; அதேவேளை, நுகர்வோர் பாதிக்கப்படுவதையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என அமைச்சர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

The post தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both