லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்கள் 95 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பு இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதற்கமைய, இதுவரை 495 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் ரக பெற்றோலின் புதிய விலை 515 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படும் அதே ரக பெற்றோலை விட, லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களில் பெற்றோலை கொள்வனவு செய்யும் வாகன சாரதிகள் லீற்றருக்கு 25 ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்று தற்போது 490 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இம்மாத ஆரம்பத்தில் குறித்த பெற்றோலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்கள் கடந்த ஒக்டோபர் மாத இறுதியிலும் 95 ஒக்டேன் பெற்றோலின் விலையை 20 ரூபாவால் அதிகரித்து 495 ரூபாவாக நிர்ணயித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு appeared first on LNW Tamil.