Home » SJB நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறித்து CID விசாரணை

SJB நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறித்து CID விசாரணை

Source

சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கருவிகள் மற்றும் மைக்ரோஃபோன்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹவை விசாரணை செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் இந்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, அண்மையில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL 307 விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தபோது, சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அல்லது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட DJI Lito X1, Lito 1 மற்றும் Neo 2 உள்ளிட்ட 39 ட்ரோன் கருவிகளும், DJI Mic Mini வகையைச் சேர்ந்த 16 மைக்ரோஃபோன் தொகுதிகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பான தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.

The post SJB நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறித்து CID விசாரணை appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both