Home » Fairway Holdings இன் 7-ஆவது லக்ஷரி அபார்ட்மென்ட் திட்டம் அறிமுகம்

Fairway Holdings இன் 7-ஆவது லக்ஷரி அபார்ட்மென்ட் திட்டம் அறிமுகம்

Source

ஃபேர்‌வே ஹோல்டிங்ஸ் Fairway Holdings தனது 7-ஆவது லக்ஷரி அபார்ட்மென்ட் திட்டமான ‘ஃபேர்‌வே லாட்டிட்யூட்’-ஐ “Fairway Latitude” அறிமுகப்படுத்தியது.

இலங்கையின் முன்னணி கான்டோமினியம் அபிவிருத்தி நிறுவனமாக விளங்கும் ஃபேர்‌வே ஹோல்டிங்ஸ், தனது 7-ஆவது லக்ஷரி அபார்ட்மென்ட் திட்டமான ‘ஃபேர்‌வே லாட்டிட்யூட்’-ஐ “Fairway Latitude” கடந்த ஜனவரி 20 அன்று சின்னமன் லைஃப் வளாகத்தில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது.

கொழும்பு 05, கிருலப்பனை, இல.07, ஹை லெவல் ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்த திட்டம், ஃபேர்‌வே ஹோல்டிங்ஸின் நவீன குடியிருப்பு திட்டங்களின் புதிய அத்தியாயமாகும்.

கொழும்பு 05-இல் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள ஃபேர்‌வே லாட்டிட்யூட், ஹை லெவல் வீதி மற்றும் பேஸ்லைன் வீதி ஆகியவற்றுக்கு நேரடி அணுகலை வழங்குகிறது. முன்னணி பாடசாலைகள், முக்கிய வர்த்தக மையங்கள், பிரதான வைத்தியசாலைகள், ஷாப்பிங் வளாகங்கள் மற்றும் உயர்தர உணவகங்கள் அருகாமையில் உள்ளமை, நவீன நகர வாழ்க்கையை விரும்புவோருக்கான சிறந்த வசிப்பிடமாக இதனை மாற்றியுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய வசதிகளில், நகரத்தின் பரந்த காட்சியுடன் கூடிய ரூஃப்டாப் இன்ஃபினிட்டி நீச்சல் குளம், முழுமையாக உபகரணங்கள் கொண்ட ஜிம்னேசியம், அழகுபடுத்தப்பட்ட ரூஃப்டாப் தோட்டம் மற்றும் 250 பேர்வரை அமரக்கூடிய ரூஃப்டாப் நிகழ்வு மண்டபம் ஆகியவை அடங்கும். மேலும், தினசரி தேவைகளுக்கான கன்வீனியன்ஸ் ஸ்டோர், கான்சியர்ஜ் சேவைகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான பிரத்தியேக மொபைல் செயலி ஆகியனவும் வழங்கப்படுகின்றன.

திட்ட அறிமுக நிகழ்வில் உரையாற்றிய ஃபேர்‌வே ஹோல்டிங்ஸ் தலைவர் விராத் டி அல்விஸ் கூறுகையில்,

“ஃபேர்‌வே லாட்டிட்யூட் எங்களுக்கான புதிய தொடக்கமாகும். இது எங்களின் 7-ஆவது லக்ஷரி அபார்ட்மென்ட் திட்டமாகும். மேலும், கொழும்பு வணிக மையத்தில் நாம் மேற்கொள்ளும் முதல் குடியிருப்பு திட்டமாகவும் இது அமைந்துள்ளது. கட்டுமான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எங்களின் முந்தைய திட்டங்களில் காணப்பட்ட உயர்தர தரநிலைகளை இதிலும் நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ளோம். குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் எங்களுக்கு ஆதரவளித்த சேலான் வங்கிக்கும் எங்கள் அனைத்து கூட்டாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

உயர்தர வாழ்க்கை முறையை நாடுவோருக்காக வடிவமைக்கப்பட்ட இந்த அபார்ட்மென்ட்கள், நேர்கோடு கட்டிட வடிவமைப்பு, இயற்கை ஒளியுடன் கூடிய திறமையான தளவமைப்பு, ஐரோப்பிய தரநிலைக் சமையலறைகள், உயர்தர உள்வடிவமைப்பு மற்றும் குறைந்தபட்ச (மினிமலிஸ்ட்) வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

இத்திட்டத்தில் 2, 3 மற்றும் 4 படுக்கையறை அபார்ட்மென்ட்கள் வழங்கப்படுகின்றன. அவற்றின் பரப்பளவு 902 முதல் 2,881 சதுர அடிவரை காணப்படுகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் என்ஜினியர்ட் மர கதவுகள் மற்றும் தரைகள், டபுள்-கிளேஸ்டு uPVC ஜன்னல்கள், ஸ்மார்ட் ஹோம் வசதிகள், ஆற்றல் திறன் கொண்ட அமைப்புகள் மற்றும் LED விளக்குகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. இது ஃபேர்‌வே நிறுவனத்தின் நிலைத்த வளர்ச்சி நோக்கத்துடன் ஒத்துள்ளது.

இதனிடையே, ஃபேர்‌வே குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி அஷீன் கார்த்தெலிஸ் தெரிவிக்கையில்,

“கொழும்பின் லக்ஷரி அபார்ட்மென்ட் சந்தையில் இது ஒரு தனித்துவமான திட்டமாகும். தற்போது ஆறு மாடிகள் நிறைவடைந்துள்ளன. கட்டுமான பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு, 2028-ஆம் ஆண்டில் திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் குடியிருப்பாளர்கள் விரைவில் குடியேறுவதுடன், அதிக முதலீட்டு வருமானத்தையும் பெற முடியும்” என்றார்.

20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், 6 திட்டங்களின் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட்களை நிறைவு செய்துள்ள ஃபேர்‌வே ஹோல்டிங்ஸ், Fairway On The Waterfront, Fairmount Urban Oasis, Fairway SkyGardens, Fairway Galle, Fairway Elements மற்றும் Fairway Urban Homes போன்ற திட்டங்கள் மூலம் நகர skyline-ஐ மாற்றியுள்ளது.

அதிநவீன வசதிகள் மற்றும் நடைமுறை வாழ்க்கைத் தேவைகளை ஒருங்கிணைக்கும் ஃபேர்‌வே லாட்டிட்யூட், ஃபேர்‌வே ஹோல்டிங்ஸின் லக்ஷரி குடியிருப்பு பாரம்பரியத்தை தொடரும் மற்றொரு முக்கியத் திட்டமாக விளங்குகிறது.

மேலும் தகவல்களுக்கு: www.latitude.lk

The post Fairway Holdings இன் 7-ஆவது லக்ஷரி அபார்ட்மென்ட் திட்டம் அறிமுகம் appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image