NPP கொள்கைப் பிரகடனம் இருவேறுபட்ட நிலைப்பாடுகளில் SJB
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் இருமுனை அணுகுமுறையை கொண்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
ஒரு இடத்தில், 15 புதிய நிறுவனங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், மற்றொரு இடத்தில், அரச சேவையை விரிவுபடுத்துவதை நிறுத்திவிட்டு, புதிய ஆட்சேர்ப்புகளை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொள்கை அறிக்கையின் மூலம், தேசிய மக்கள் சக்;திக்கு நிர்வாகம் பற்றிய நடைமுறை புரிதல் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொலன்னாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கும் பகல்நேர பராமரிப்பு மையங்கள் கட்டுவது தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு கொள்கையாகும். ஆனால் நாட்டில் ஏற்கனவே குழந்தைகள் இல்லாத பல பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு 3 கிலோமீற்றருக்கும் பாடசாலைகள் அமைக்கும் யோசனை கேலிக்கூத்தானது என ரோஹினி கவிரத்ன குறறிப்பிட்டுள்ளார். பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் குழு அவர்களின் இந்தக் கொள்கையை தயாரித்துள்ளது.
இந்த இரண்டு முன்மொழிவுகளும் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் குறைந்தது 3 பில்லியன் ரூபாவையாவது புதிதாக செலவிட வேண்டும் என்பது அவர்களின் நடைமுறைச் சாத்தியமற்ற தன்மையைக் காட்டுகிறது.
அதற்கான பணத்தை எப்படி திரட்டுவார்கள் என்று தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் 2019ஆம் ஆண்டு இவ்வாறான அறிக்கைகளை முன்வைத்திருந்தார்.
அந்தக் காலத்திலும் மக்கள் அதை நம்பி ஏமாந்து விட்டார்கள் என்வும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.