பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான நீண்ட கால ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
Shell நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், இணைக்கப்பட்ட RM Parks நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
Shell வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் நான்காவது நிறுவனமாக RM Parks திகழ்கிறது.
இன்று கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், இருபது வருடங்களுக்கு இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும் விநியோகிக்கவும் விற்பனை செய்யவும் அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
அத்துடன், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களூடாக குறித்த வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், மேலும் புதிய 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிப்பதற்கும் குறித்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கிறது.